பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு - காயங்களுடன் யாழ் போதனாவில் அனுமதி - Yarl Voice பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு - காயங்களுடன் யாழ் போதனாவில் அனுமதி - Yarl Voice

பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு - காயங்களுடன் யாழ் போதனாவில் அனுமதி


ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் வாள்   வெட்டுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதல் நடத்திய  சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர்  அரியகுட்டி நிமலரூபன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த வாள்வெட்டுச் சம்பவத்தை நடத்தியதாக் கூறப்படுகின்ற ஒருவருக்கும் இனந்தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அவரும் சிகிச்சைக்காக யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post