வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 53 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்றில்லை என பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 53 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்றில்லை என பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 53 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்றில்லை என பணிப்பாளர் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைிலிருந்தும் பல இடங்களைச் சேர்ந்த 53 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூடப் பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனொ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு யாழில் ஆய்வுகூடப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என வடக்கின் ஐந்த மாவட்டங்களைச் சேர்ந்த 53 பேருக்கு இன்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆய்வுகூடப் பரிசோதனை நடாத்தப்பட்டது.

இவ்வாறு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 53 பேரில் ஒருவருக்கும் தொற்றில்லை என பரிசொதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இன்று பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

யாழ்  போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள்  - 10 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர்  பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 5  பேர்.

வவுனியா பொது வைத்தியசாலை - 7 பேர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலை - ஒருவர்.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலை -  ஒருவர்.

மன்னார் மாவட்டம்  -  29 பேர்.

(மன்னார மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள்  பார ஊர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தொற்று உள்ளவர்களோடு தொடர்பைப் பேணியவர்கள்.)

0/Post a Comment/Comments

Previous Post Next Post