யாழ். வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகள் அதிரடி சோதனை - Yarl Voice யாழ். வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகள் அதிரடி சோதனை - Yarl Voice

யாழ். வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகள் அதிரடி சோதனை

யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரங்கு உத்தரவால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் தொடர்பில் பாவனையாளர் அதிகாரசபை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் தொடர் ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களின் திடிர் விலை உயர்வு தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஐன் இராமநாதன் யாழ் மாவட்ட அரச அதிபரிடம் சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து யாழ் மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய பாவனையாளர் அதிகார சபையினால் பல இடங்களிலும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக நிலையங்களில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் மொத்த இருப்பும்  கணக்கெடுக்கப்பட்டன.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் இன்று யாழ்ப்பாணம் கொழும்புத்துறை திருநெல்வேலி  கொடிகாமம் சாவகச்சேரி கைதடி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை நிலையங்கள்  பரிசோதிக்கப்பட்டதுடன் இருப்பு கணக்கும் எடுக்கப்பட்டது .

இவ்வாறாக இன்றைய சோதனை நடவடிக்கையில் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி நடவடிக்கை தொடர்பான தேவைப்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post