ஆவா குழுவின் தலைவன் என்று பொலிஸாரால் கூறப்படுகின்ற விநோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்திலுள்ள வீடொன்றில் இன்று நடைபெற்றுள்ளது. இவ்வாறு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தததையடுத்து குறித்த வீட்டை இருர்னுவத்தினர் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது அங்கிருந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளதுடன் அங்கு நின்றிருந்த மோட்டர் சைக்கள் வாகனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆயினும் அங்கு பிறந்தநாள் கொண்டாடிய ஆவாகுழுவின் தலைவன் உட்பட பலரும் தப்பியோடியுள்ளனர்.
யுhழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் ஊரடங்களை மீறி கூட்டம் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment