கொரோனோ வைரஸ் தொற்று காணரமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனோ என்றும் கொரோனோ லொக்டவுன் என்று விநோதமான முறையில் பெயர் சூட்டிய சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனோ தொற்று ஆபத்து இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இந்தியா மூழுவதும் 21 நாட்கள் தொடர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந் நிலையில் ஊரடங்குச் சமயத்தில் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் இரு குடும்பங்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு வினோதமான முறையில் பெயர்களைச் சூட்டியிருக்கின்றனர்.
அதாவது உத்திரப் பிரதேசத்தில் உள்ள கோரப்கபூரில் பிறந்த குழந்தைக்கு கொரோன என்று ஒரு குடும்பம் பெயர் சூட்டியுள்ளது. அதே போல தியோரியா மாவட்டத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு லொக்டவுன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

Post a Comment