கொரோனோ சந்தேகத்தில் வடக்கில் மட்டும் 346 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சோதனைகள் எதுவுமின்றி 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படுகின்ற நிலைமையெ உள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகவே உள்ளது.
ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு 14 நாட்களுக்கு அறிகுறிகள் இல்லாதவிடத்து அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அதே போல பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட இருந்தனர்.
ஆயினுமு; அவர்களுக்கு மேற்கொண்ட பரிசொதனைகளிலெயே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கொரோனோ பரிசொதனை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான பரிசொதனைகளின் பின்னரே அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்

Post a Comment