யாழில் கொரோனோ பரிசோதனையை செய்கின்ற வைத்திய துறையினருக்கு சித்தார்த்தன் பாராட்டு - Yarl Voice யாழில் கொரோனோ பரிசோதனையை செய்கின்ற வைத்திய துறையினருக்கு சித்தார்த்தன் பாராட்டு - Yarl Voice

யாழில் கொரோனோ பரிசோதனையை செய்கின்ற வைத்திய துறையினருக்கு சித்தார்த்தன் பாராட்டு

கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது மக்களின் மனிதிற்கு ஆறுதலளிப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்த உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்றி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந் நிலையில் கொரோனோ சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமுதிக்கப்படுபவர்களுக்கான பரிசோதனை யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே பல நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் மாதிரிகள் பெறப்பட்டு அதனை வெளி மாவட்டத்திற்கு அனுப்பி தான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தப் பரிசோதனைகள் யாழ்ப்பாணத்திலேயே மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாய யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலேயே இந்தப் பரிசோதனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு யாழிலேயே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது கொரோனோ குறித்து அச்சப்படுகின்ற மக்களுக்கு மன அறுதலை அளிப்பதாக அமைகிறது.

அது மட்டுமல்லாமல் யாழப்பாணத்திலேயே இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களஇ; வைத்தியத் துறைசார்ந்தவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 ஆகையினால் அவர்களை மதித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். அவர்களது இந்த உன்னத சேவையை எமது மக்களுக்கு மனதிற்கு ஒரு நிம்மதியையும் அறுதலையும் அளிப்பதாகவே அமையும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post