யாழில் அத்தியாவசிய பெருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை - அரச அதிபர் - Yarl Voice யாழில் அத்தியாவசிய பெருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை - அரச அதிபர் - Yarl Voice

யாழில் அத்தியாவசிய பெருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை - அரச அதிபர்

தற்போது யாழ்ப்பாண  குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி  அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் இடம்பெறும்  பஸ் போக்குவரத்தில் குறைபாடு காணப்படுவது  தொடர்பில்  தனக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்களுக்கு பஸ் சேவை போதியளவு இல்லாத பிரச்சனை தனக்கு சுட்டிக்கட்டப்பட்டு   உள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள நிலைமை மேலும் தொடர்வதற்கு பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post