யாழில் ஊரடங்கை தளர்த்தாமல் ஒரு வார காலமாவது நீடியுங்கள் - மருத்து சங்கம் கோரிக்கை - Yarl Voice யாழில் ஊரடங்கை தளர்த்தாமல் ஒரு வார காலமாவது நீடியுங்கள் - மருத்து சங்கம் கோரிக்கை - Yarl Voice

யாழில் ஊரடங்கை தளர்த்தாமல் ஒரு வார காலமாவது நீடியுங்கள் - மருத்து சங்கம் கோரிக்கை

கொரேனோ ஆபத்து இன்றும் நீங்கவில்லை என்பதால் யாழில் ஊரடங்கை தளர்த்தாமல் ஒரு வார காலமாவது நீடியுங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை  கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கிளையில் தலைவரும் வட மாகாண இணைப்பாளருமான வைத்தியர் காண்டிபன் தாய்ச் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

யாழ்ப்பாண மாவட்டத்தில் குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவு நீக்குதல் சம்பந்தமாக யாழ்ப்பாண மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முடிவு தாய்சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைப்பு

 யாழ்ப்பாண மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வடக்கு மாகாணம் அவர்களுடன் நாங்கள் அவசர சந்திப்பு ஒன்றை இன்று நடத்தியிருந்தோம். ஆதார வைத்தியசாலை பருத்தித்துறையின் கிளை தெல்லிபளை புற்றுநோய் வைத்தியசாலையின் கிளை    யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கிளை மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கிளை  ஆகியவற்றின் கிளை சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான இந்த முடிவானது வடக்கு மாகாணத்தின் சுகாதார வைத்திய  அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

 16  தொற்று நோயாளர்கள்இ மதகுருவுடன்  இருந்து கொரோனா  தொற்றிக்குள்ளாகியதும் அவருடன்  நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேர்களில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 1200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதால் வடக்கு மாகாண  சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 க்குப் பிறகு மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீக்க பரிந்துரைத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை ஆகக் குறைந்தது இந்த  நெருங்கிய தொடர்புகளுடன்  செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தின் சமூக தொற்று நிலை  சம்பந்தமான வெளிப்பாடு மேம்படும்.

 குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் பொது மக்கள் பல்வேறு வியாதிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவார்கள்.மேலும் கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை  பூர்த்தி செய்ய எல்லா  மருத்துவமனைகள் இன்னமும்  தயார் நிலையில்  இல்லை.

 எனவேஇ நெருங்கிய தொடர்புகளின் பரிசோதனைகளை நிறைவு செய்வதற்கும்இ மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீட்டிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post