எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தொழில் முயற்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும் - விக்னேஸ் - Yarl Voice எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தொழில் முயற்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும் - விக்னேஸ் - Yarl Voice

எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தொழில் முயற்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும் - விக்னேஸ்

தொழிற்துறை முயற்சிகளில் மாற்றங்களை செய்வதனூடாக எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் என யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத் தலைவர் கு.விக்னேஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இன்று நாங்கள் உலகத்தின் போக்கில் மிகவும் இக்கட்டான சவால்மிகுந்த சூழலிலே எங்களுடைய நாளாந்த நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

இன்று உலகளாவிய ரீதியில் தனியார் துறையும் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற தொழிற்துறையும்  முற்றுமுழுதாக முடங்கியிருப்பதுடன் உலகளாவிய ரீதியிலே தங்களை வியாபார ஜாம்பவான்களாகவும் தனித்துவம் மிக்க நிறுவனங்களாகவும் காட்டி கொண்டிருந்த மிகப்பெரும் வியாபார கட்டமைப்புக்கள் ழுமுமையாக முடங்கி கோடிக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

இதனால் இன்று ஒவ்வொருவருடைய குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு இருப்பதோடு உலகிலே முன்னணி வகிக்கின்ற செல்வந்த நாடுகளினுடைய பொருளாதார நிலைமைகள் கூட எதிர்காலம் முற்றிலும் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலே தற்சமயம் இருந்து வருகின்றது.

அந்த வகையிலே நாங்கள் வளர்ச்சியடைந்து வருகின்ற நாடு என்கின்ற வரையில் இலங்கைக்கும் மிகமோசமான பாதிப்பு அனைத்து துறைகளிலும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் இருந்து யாருமே தப்பித்துக் கொள்ளமுடியாது. இதுவொரு பொதுநியதியாக இன்று ஆக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் தொடர்ச்சியாக வர இருக்கின்ற காலப்பகுதியிலே நாளாந்த  இயல்பு வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்படுகின்ற சூழலிலே தொழில் முயற்சிகளை மீள கட்டியெழுப்ப வேண்டிய ஒரு தேவையும் எமது தனியார் தொழில் முயற்சிகளினூடாக பிரதேசத்தினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்திக்கும் நாங்கள் வழங்கி வந்த பொருளாதார ஆதரவினை தொடர்ந்து வழங்க வேண்டிய ஒர் நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்த நேரத்திலே சில முக்கியமான விடயங்களை நாம் மனதிலே கொண்டு எம் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

குறிப்பாக இன்றைய இந்த ஊழுஏஐனு -19 தொற்று காரணமாக உலகத்தினுடைய பொருளாதார கட்டமைப்புக்கு ஆணிவேராக இருந்த தொழிற்துறையினுடைய கட்டமைப்பினை கடந்த காலத்தினை விட எதிர்காலத்திலே மாற்றியமைக்ககூடிய தேவை இருக்கின்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த தேவை இருக்கும் என நினைக்கின்றேன் ஏனென்றால் முற்றுமுழுதான தொழிற்துறை கட்டமைப்பு மாற்றத்தை இந்த ஊழுஏஐனு -19 தொற்று உருவாக்கி இருக்கின்றது. ஆகவே கடந்தகாலங்களில் முன்ணணியில் இருந்த தொழிற்துறைகள் எதிர்காலத்தில் மிகவும் மோசமாக பின்தங்கப்படலாம் அதேபோல் புதிய தொழிற்துறைகளிற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படலாம்.

இந்த வகையிலே உலகத்தினுடைய தேவையை நாட்டின் உடைய தேவையை எமது பிரதேசத்தினுடைய தேவையை நாங்கள் விளங்கி கொண்டவர்களாக எங்களுடைய எதிர்கால தொழிற்துறை மற்றும் வியாபார நடவடிக்கைகளை அதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதே வர்த்தக தொழிற்துறைமன்றத்தின் அறிவுறுத்தலாக எங்களுடைய அங்கத்தவர்களுக்கு இருக்கின்றது.

பொதுவாக எங்களுடைய வர்த்தக மற்றும் தொழிற்துறை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற முயற்சியாளர்கள் தங்களுடைய போக்கிலே மாற்றத்தை சிலவேளைகளில் ஏற்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள் அதற்கு அப்பால் மீளவும் எங்களுடைய நாட்டிலே இயல்புநிலை திரும்புகின்ற பொழுது  மீண்டும் நமது தொழில்முயற்சிகளை உருவாக்கின்ற வேளையிலே நாங்கள் பொதுவாக இரண்டு விடயங்களில் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

முதலாவது எங்களுடைய தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசு தன்னாலான ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்;. அதாவது அரசாங்கம் எங்களது தொழில் முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான வசதிகளை உருவாக்கி தருவதற்கு தயாராக இருக்கின்றது.

அந்தவகையிலே நாங்கள் அரசாங்கத்தின் உதவியோடு எங்களது தொழில் முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். குறிப்பாக ஒரிரு விடயங்களை இங்கு குறிப்பிடலாம்.

நீங்கள் ஏற்கனவே உங்கள் தொழில் முயற்சிகளுக்காகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் கடன்களை பெற்றிருப்பீர்களாக இருந்தால் உங்களது கடன்களை மீளச் செலுத்துவதற்காக அரசாங்க அறிவுறுத்தல்களின் பிரகாரம் 6 மாத காலத்திற்கு உங்கள் கொடுப்பனவுகளை ஒத்தி வைக்ககூடிய மாதிரியான சாத்தியப்பாடுகள் இருக்கின்றது.

இதற்கான விண்ணப்பபடிவங்களை உங்கள் வங்கிகளுடன் தொடர்பு கொண்டு உரிய காலத்திலே அதனை பூர்த்தி செய்து கையளிப்பதனூடாக இச் செயற்பாடுகளை விரைவுபடுத்திக் கொள்ளலாம். குறிப்பாக ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு முன்னர் உங்களின் தேவைக்கான வேண்டுகோளை விடுக்க வேண்டிய நிர்ப்பந்த்தில் இருக்கின்றீர்கள்.

மேலும் நமது அரசாங்கம் உங்களுடைய முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான தொழிற்படு மூலதனத்தை பெற்றுக்கொள்வதற்கென மிகக்குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடன் வசதிகளையும் ஒழுங்கு செய்திருக்கின்றது என அறிகின்றோம்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களை சரியான முறையில் உரிய நேரத்தில் பயன்படுத்துவதனூடாக நீங்கள் உங்கள் வியாபாரத்தை மீண்டும் சிறப்பாக முன்னெடுக்க கூடியமைக்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதற்காக நமது வர்த்தக தொழிற்துறை மன்றம் ஊழுஏஐனு-19 பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டு வியாபார தொழிற்துறை இழப்புக்களை சந்தித்துள்ள எமது அங்கத்தவர்களிடம் இருந்து ஒர் மதிப்பீட்டினை பெற்றுக்கொள்ள இருக்கின்றது.

அதற்குரிய விண்ணப்ப படிவங்கள் எமது அலுவலத்தினால் வழங்கப்படுகின்றது. தயவு செய்து அவ் விண்ணப்ப படிவங்களை பெற்று எங்களுக்கு உங்களுடைய இழப்பீடுகளை அறிவிக்கின்ற பட்சத்தில் நாங்கள் இந்த விடயத்தினை உரியவர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த  விண்ணப்ப படிவங்களை இம்மாதம் 25ம் திகதியிற்கு முன்னர் கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதற்காக கீழ்காணும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு இதற்குரிய விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியும்.  (021 222 6609ஃ 070 366 3600) மேலும் இரண்டாவது முக்கியமான விடயம் என்னவெனில் நீங்கள் மீண்டும் உங்களது தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கும் பொழுது கடந்த காலங்களிலே காணப்பட்டவாறான சூழல் எதிர்காலத்திலே இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

 குறிப்பாக சுற்றுலாத் துறையை பார்த்தீர்களேயானால் மிகப்பெரிய முதலீடுகளை கொண்ட இந்த சுற்றுலாத்துறை பாரியளவிலான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.

ஆகவேஇ எதிர்காலத்திலே இந்த சுற்றுலாத் துறையினுடைய பரிமாணம் முற்றுமுழுதாக மாற்றமடைய இருக்கின்றது. இவ்வாறுதான் ஒவ்வொரு துறையிலும் கடந்த காலங்களில் காணப்பட்ட கட்டமைப்புக்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது எதிர்காலத்தில் நீங்கள் செய்ய இருக்கின்ற வியாபாரத்தில் நிறைய மாற்றங்களினை உள்வாங்கி அதனை சிறப்பாக மேற்கொள்வதற்கான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தற்போது வீடுகளில் இருந்து பொழுதுகளை கழிக்கின்ற வேளையிலே உங்களுடைய எதிர்கால வியாபார மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பாக ஒவ்வொருவரும் முதலீட்டாளார்கள் என்ற வகையிலே மிகத் தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றீர்கள்.

 குறிப்பாக உங்கள் நிறுவனத்தின் மனிதவளத்தினை மாற்றியமைக்க வேண்டிய ஒர் சூழல் ஏற்படலாம். உங்கள் சந்தைப்படுத்தல் தொடர்பிலே மாற்றங்களை கொண்டு வரவேண்டிய தேவை ஒன்று இருக்கலாம்.

அதேபோல் உங்களுடைய உற்பத்தி பொருட்களினுடைய தேவைஇ உற்பத்தி பொருட்களினுடைய தரம்இ உற்பத்தி பொருட்களினுடைய உற்பத்தியின் அளவு என்பவற்றில் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டு வரவேண்டிய தேவை இருக்கும்.

அதேபோல் நீண்டகால தந்திரோபாய திட்டமிடலை நீங்கள் மேற்கொண்டிருப்பீர்கள் ஆனால் அந்த தந்திரோபாய திட்;டமிடல் என்பது இனிவரும் காலங்களில் எவ்வாறு அது உங்களுடைய வியாபாரத்திற்கு பொருந்தும் அந்த திட்டங்களில் எவ்வாறு மாற்றங்களினை செய்ய வேண்டிய தேவைக்கு நீங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றீhகள் என்பதை விரிவாக ஆராய்ந்து அந்த மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

உங்களுடைய வியாபார ஸ்தாபனத்தினுடைய ஒவ்வொரு அலகுரீதியிலும் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள் என நான் கருதுகின்றேன்.

இந்த விடயங்களை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து எதிர்காலவோட்டம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதையும் அதற்கேற்ற வகையிலே உங்கள் வியாபார தந்திரோபாயங்களையும் வியாபார நகர்வுகளையும் நீங்கள் நகர்த்த வேண்டும் என்பதும் யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தினுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இது தொடர்பாக உங்களுக்கு காணப்படும் சந்தேகங்கள் மற்றும் தேவைப்படும் ஆலோசனைகளை எங்களுடைய நிறுவனம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.

ஆகவே நாங்கள் இதனை சாவாலாக ஏற்று சாதகமான முறையில் தொழில்துறை முயற்சிகளை முன்னெடுப்பதன் ஊடாக நாட்டிற்கும் மக்களிற்கும் சிறந்த பொருளாதார அபிவிருத்திக்கான அடித்தளத்தினை அமைத்து கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post