தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தான் கொரோனோ - பதற்றமடைய வேண்டாமென கோரிக்கை - Yarl Voice தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தான் கொரோனோ - பதற்றமடைய வேண்டாமென கோரிக்கை - Yarl Voice

தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தான் கொரோனோ - பதற்றமடைய வேண்டாமென கோரிக்கை

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்கே தற்போது கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த தொற்று ஏனையவர்களுக்கு தொற்றி இருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக மிக குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகையினால் பொது மக்கள் பதட்டமடையத் தேவையில்லை என்றும் ஆனால் மிக மிக அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 6 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதனைக் கண்டு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் கொரோனோ சந்தேகத்தில் இவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு பலாலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதனால் இவர்கள் வேறு நபர்களுடன் தொடர்பில்லாமல் இருந்து வந்தனர். ஆகையினால் இவர்களால் ஏனையவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே உள்ளது.

ஆனாலும் பொது மக்கள் தொடர்ந்தும் கொரோனோ தடுப்பு பற்றி விழிப்பாக இருக்க வேண்டும். அதே நேரம் அளவிற்கு அதிகமான பதற்றத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருவது போன்று இலங்கையிலும் இதன் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே எமது சூழலில் ஏனையவருக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

குறிப்பாக நேற்று பலாலி பகுதுpயில் பரிசோதனைக்கு உட்படுத்தி தொற்று உறுதிப்படுத்தப்பட்ட எட்டு பேரில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அதில் தகப்பன் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள அடங்குகின்றனர்;. மற்ற மூவரும் அவர்கள் உறவினர்கள். அதில் ஒருவர் குறித்த போதகருக்கு சாரதியாக இருந்தவர். இன்னுமொருவர் வவுனியாவைச் சேர்ந்தவர். இந்த எட்டுப் பேரில் இருவர் பெண்பிள்ளைகள் மற்றைய 6 Nரும் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த எட்டு பேரும் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் இருந்து பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருப்பதால் இவர்கள் வெளியில் எந்தவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை ஆகவே பொது மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. இவர்களால் வெளியாருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புக்கள் இல்லை.

இதே நேரம் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பது அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பலரையும் தனிமைப்படுத்திபரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு இந்தப் பரிசோதனைகளை வெளியில் உள்ளவர்களிடமும் செய்து வருகின்றொம்.

ஆனால் அவ்வாறு வெளியில் உள்ள ஒருவரும் தொற்று உள்ளவர்களாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆகவே இந்த நிலைமை என்பது பொதுவாக எமது பகுதிகளில் வெளியில் உள்ளவர்களிடம் தொற்று இல்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆகையினால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post