கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட தாவடியைச் சேர்ந்த விவேகானந்தனுக்கு கடந்த 22 ஆம் திகதி கொரோனோ தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்டபடுத்தப்பட்ட விவேகானந்தன் தற்போது உடல் நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆகையினால் இன்னும் சில தினங்களில் அல்லது சில வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்று கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைப் பணிப்பாளர் தன்னிடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதே வேளை விவேகானந்தனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டவர்கள் எனப் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் மேலும் ஆறு பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 6 பேரும் தற்பொது கொழும:பு தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் மேலும் பலரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலைமையிலே யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட விவேகாந்தன் உடல் நிலை தேறி வருவதாகவும் விரைவில் வீடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment