கொரோனாவை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்துவதாக ஐ.நா குற்றச்சாட்டு - Yarl Voice கொரோனாவை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்துவதாக ஐ.நா குற்றச்சாட்டு - Yarl Voice

கொரோனாவை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்துவதாக ஐ.நா குற்றச்சாட்டு

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்துவதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகத்தில் இளைஞர்கள்இ சமாதானம் பாதுகாப்பு தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகமெங்கும் போடப்பட்டுள்ள ஊரடங்கை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புணர்வை பரப்பவும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான பொழுதை கழிக்கிற இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அமர்த்தவும் முயற்சிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கு முன்பேகூட ஐந்தில் ஒரு இளைஞருக்கு சரியான கல்விஇ பயிற்சி அல்லது வேலை கிடைப்பதில்லை. எனவே அவர்களில் நான்கில் ஒருவர்இ வன்முறையாலும் மோதலாலும் கவர்ந்து இழுக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 1 கோடியே 20 லட்சம் பெண்கள்இ சிறுமிகளாக இருக்கிறபோதே தாய்மை அடைகின்றனர்.

இவர்களின் விரக்தி வெளிப்படையான தோல்விகள் போன்றவற்றுக்கு தீர்வு காண இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறி விட்டனர். இது ஆட்சியில் இருப்பவர்கள் அரசியல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து போவதற்கு தீனியாக அமைகிறது.

அப்படி ஒரு சுழற்சி நடக்கிறபோது இளைஞர்களின் கோபங்களையும் விரக்தியையும் பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களை பயங்கரவாதமயம் ஆக்குகிறார்கள்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும்இ ஒருவருக்கு ஒருவர் இளைஞர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். மாற்றத்துக்கு வித்திடுகிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிராகவும் போரிடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கையும் அளித்தார். அந்த அறிக்கையில் 'உலகில் 10 முதல் 24 வயது வரையிலான 185 கோடி இளைஞர்கள்இ இளம்பெண்கள் உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளிலும் மோதல் நடைபெறுகிற நாடுகளிலும் இருக்கின்றனர்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post