கொரோனா விளைவை வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டி ஏற்படும் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice கொரோனா விளைவை வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டி ஏற்படும் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice

கொரோனா விளைவை வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டி ஏற்படும் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் இருந்தாலும் அதனால் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களுக்கும் ஆபத்துள்ளது. என கூறியிருக்கும் இலங்கை மருத்துவா் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளா் மருத்துவா் த.காண்டீபன்  சமூக இடைவெளியை பேணாமைக்கான விளைவை வடமாகாண மக்கள் அனுபவிக்க நோிடும் எனவும் கூறியுள்ளாா்.

ஊரடங்கு சட்டம் தளா்த்தப்படும் பிரதேசங்களில் சமூக இடைவெளி இறுக்கமாக பேணப்படும் எனவும் அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை பின்பற்றப்படும். எனவும் கூறப்பட்டபோதும் வடக்கில் அவை எவையும் கருத்தில் எடுக்கப்படாமல் மக்கள் வீதிகளில் சரமாக நடமாடுவதுடன் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை மீறுவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கு ம்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில்..

 வடமாகாணம் மட்டுமல்லாம ல் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நாங்கள் அறிந்தவரையில் சமூக இடைவெளி பேணும் விடயத்தை
குறைந்தபட்சம் கூட மக்கள் பின்பற்றுவதாக இல்லை. அதேபோல் தற்போது முக கவசம் அணியும் பழக்கமும் அருகிக் கொண்டிருக்கின்றது. 

மேலும் வீதிகளிலும் பொது இடங்களிலும் மக்கள் மிக சாதாரணமாக கூடி நிற்பதும் பேசிக் கொண்டிருப்பதும் கூட அதிகாித்திருக்கின்றது. இதனை நாங்கள் தினசாி அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் தொற்று ஆபத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல. இலங்கையில் ஒரு மாவட்டத்தில் ஆபத்திருந்தாலும் அதனால் 25 மாவட்டங்களுக்கும் ஆபத்தே. காரணம் மாவட்டங்களுக்கிடையிலான நடமாட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தொற்று அபாயம் உள்ள பகுதியில் இருந்து ஒருவா் எமது மாவட்டத்திற்குள் வந்தால் கூட நிலமை மோசமானதாக மாறும். அது இன்றைக்கு நடக்கும் நாளைக்கு நடக்கும் என கூற முடியாது. ஆனால் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது.

ஆகவே சமூக இடைவெளியை பேணுதல் சுகாதார நடைமுறைகளை பேணுதல் போன்றவற்றை ஒருவா் மீறி நடந்தால் கூட  அது ஒரு சமுகத்தை பாதிக்கும் ஆபத்துள்ளது. மேலும் 90 வீதமான சமுக இடைவெளி பேணப்படவேண்டும். என்பது நியமம். ஆனால் அதற்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கவேண்டும். ஊரடங்கை தளா்த்திவிட்டு 90வீதம் சமூக இடைவெளியை பேண இயலாது.

அதேபோல் அடை யாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மக்களை வெளியில் நடமாட விடுவதும் கூட ஆபத்தானது என்பது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும். எனவே மக்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அது கட்டாயம். இன்று ஆபத்தில்லாமல் இருக்கலாம். ஆனால் ஆபத்துக்கான சாத்தியம் உள்ளது. என்பதை நினைவில் கொண்டு பொறுப்புடன் நடப்பது எமது கடமை என்றாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post