தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தேவையேற்படின் இரண்டாம் கட்டப் பரிசோதனை - பணிப்பாளர் - Yarl Voice தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தேவையேற்படின் இரண்டாம் கட்டப் பரிசோதனை - பணிப்பாளர் - Yarl Voice

தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தேவையேற்படின் இரண்டாம் கட்டப் பரிசோதனை - பணிப்பாளர்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனைகளில் தொற்று இல்லாவிடினும் தொடர்ந்து ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு இரண்டாம் கட்டப் பரிசொதனைகள் மேற்கொள்ளப்படும் என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்ததாவது..

பலாலியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதற்கட்டப் பரிசொதனைகளில் தொற்று இல்லாவிடினும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பரிசொதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு அவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படுமா எனக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

கொரோனொ தொற்று சந்தேகத்தில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அதே போல தற்பொதும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவர்களில் பலருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் பலாலியில் ஒன்றாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு முதற்கட்டப் பரிசொதனையில் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் இன்னும் சிலருக்கு தொற்று இணங்காணப்படவில்லை. ஆனால் அடுத்தகட்டப் பரிசோதனைகளில் தொற்று இணங்காணப்பட்டுள்ளது.

அந்தத் தொற்றானது சங்கிலித் தொடரான தொற்றாக ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இங்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனையில் தொற்று ஒருவக்கும் ஏற்படவில்லை.

ஆகவே அவர்களுக்கும் ஏதும் அறிகுறிகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதனைத் தெரியப்படுத்துமிடத்தே அடுத்தகட்டப் பரிசொதனைகள் மேற்கொள்ளப்படும். ஆகையினால் வெளியில் இருக்கின்ற பொது மக்கள் கொரோனொ தொற்று தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post