யாழ் போதனாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்த தெரிவித்துள்ளதாவது..
யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொரோனோ தொற்று நோயாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு மேற்கொண்ட பரிசொதனையில் முதற்கட்டமாக 6 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்களது உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சில தினங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் 8 பேர் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இருவருக்கு தொற்று இரப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் அந்த இருவரும் இரணவில வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
Post a Comment