மதுபானம் சிகரெட் பாவிப்பது ஆபத்து என எச்சரித்துள்ள மருத்துவர்கள் தடைவிதிக்க வலியுறுத்து - Yarl Voice மதுபானம் சிகரெட் பாவிப்பது ஆபத்து என எச்சரித்துள்ள மருத்துவர்கள் தடைவிதிக்க வலியுறுத்து - Yarl Voice

மதுபானம் சிகரெட் பாவிப்பது ஆபத்து என எச்சரித்துள்ள மருத்துவர்கள் தடைவிதிக்க வலியுறுத்து
கொரோனோ தொற்று காலப் பகுதியில் மதுபானம் மற்றும் புகைத்தல் விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ சங்கம் இதனைக் கட்டுப்படுத்துமாறும் சுகாதாரப் பரிவினரை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டிபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

நேற்றிலிருந்து ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணத்தில்  தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலை நிலவுவதன் காரணமாக பொது மக்கள் சுகாதாரத்துறையினால் கூறப்படுகின்ற  விடயங்களை கடைப்பிடிக்காமை மீண்டும் யாழ்ப்பாணத்தில்  கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிடும்  என அஞ்சுகின்றோம்.

இதற்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் மதுபானக் கடைகளில் அளவுக்கதிகமாக கூடியதும் அவர்கள் அளவுக்கதிகமாக கொள்வனவு செய்ததையும் இன்றைய  பத்திரிகைள்   மூலம் அனைவரும் அறிந்து கொண்டோம்.

கொரோனா தொற்று நோய் காலப் பகுதியில் மதுபானம் புகைப்பது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

 1.மதுபானம் குடிப்பவர்கள் சமூகத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்க மாட்டார்கள்  என்பது அனைவரும் அறிந்ததே .

 2. வழக்கமாக மதுபானம் அருந்துபவர்கள் குழுக்களாக  செய்கிறார்கள் எனவே சமூக தூரத்தை பராமரிக்க முடியாது.அது மட்டுமல்ல ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு இலகுவில் தொற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்.

 3. இந்த காலகட்டத்தில் மது அருந்துவதால்  யாழ்ப்பாணத்தில் அதிக துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிக்கும். இதனால் இதில் ஈடுபடுபவர்களை  காவல்துறை தேவையின்றி தலையிட வேண்டியிருக்கும்.

 4. இந்த காலகட்டத்தில் சமூகத்திற்குள் தேவையற்ற ஒழுக்கச்சரிவு ஏற்படும்.

மதுபானம் பயன்படுத்துபவர்களில் சிலர் புகைபிடிக்கும் பழக்கத்திலும் ஈடுபடுவர். இத்துடன் புகைபிடிக்கும் நபர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த நோய் மோசமான விளைவுகளை மட்டுமல்ல மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

புகையிலை பொருட்களையும் புகைப்பதைத் தவிர்க்குமாறும் மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறும்  நாங்கள்  பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.

இதே வேளை இன்று மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறு  ஜனாதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

இதனால் பெருமளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் ஜனாதிபதி அவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று கொரோனா தொற்றில் இருந்து மக்களின் நலனுக்காக நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்.

புகைத்தல் மக்களுக்கு கொரோனா நோய் மட்டுமல்ல புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதனால்  புகையிலை பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்குமாறும் வடமாகாண  சுகாதாரத் துறையினர் இது சம்பந்தமாக வடமாகாண  உயர் அதிகாரிகளுடன் இனணந்து புகைத்தலை  இக் கொரோனா தொற்றுக்காலத்தில் முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post