ஊரடங்கு வேளையில் பட்டப்பபகலில் மாடு திருடிய கும்பல் பொது மக்களால் மடக்கி பிடிப்பு - Yarl Voice ஊரடங்கு வேளையில் பட்டப்பபகலில் மாடு திருடிய கும்பல் பொது மக்களால் மடக்கி பிடிப்பு - Yarl Voice

ஊரடங்கு வேளையில் பட்டப்பபகலில் மாடு திருடிய கும்பல் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் காரைநகர் களபூமியில் காளை மாட்டை பட்டப்பகலில் களவாடி சிவகாமி அம்மன் ஆலயத்தடியில் வைத்து வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்தவர்களை ஊர் இளைஞர்கள் பொலிஸாருடன் ஒன்சேர்ந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 ஆண்கள் ஓடித்தப்பிய நிலையில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றமத்தில் முற்படுத்தியுள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தருடைய 40 ஆயிரம் பெறுமதியான காளை மாடு கடந்த 19 ஆம் திகதி (நேற்று முன்தினம்) நண்பகல் 12 மணியளவில் களவாடப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம சேவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து களவாடப்பட்ட மாட்டினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் 20 ஆம் திகதி (நேற்று) களவாடப்பட்ட மாடு சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு மிக அருகில் பகுதியில் வைத்து வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலை ஊர் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது அங்கிருந்த 3 ஆண்கள் ஓடித்தப்பிய நிலையில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன் ஒரு தொகுதி இறைச்சினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் குறித்த காளை மாட்டின் இறைச்சி சுமார் 20 பேருக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் முடிவில் கைது செய்யப்பட்ட 3 பெண்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

மேலும் தப்பி ஓடியவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அடாத்தாக குடியேறியிருக்கும் ஒரு கும்பலினாலேயே இந்த செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று ஊர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post