பலாலியில் உள்ளவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய தீர்மானம் - Yarl Voice பலாலியில் உள்ளவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய தீர்மானம் - Yarl Voice

பலாலியில் உள்ளவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய தீர்மானம்

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்போதுள்ளவர்களுக்கு தொடர்ந்தும் பரிசோதனை செய்யப்படுமென்று யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழில் மத போதகருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேற்கொண்ட பரிசொதனைகளில் முதலில் 6 பேருக்கும் பின்னர் 8 பேருக்கும் நேற்று இரண்ட பேருக்கும் என 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது.

இந்த நிலைளில் தற்பொதுள்ள நான்கு பேருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கலாம். ஆகையினால் அவர்களுக்கு தொடர்ந்தும் பரிசொதனைகள் செய்யப்படும். அதே நேரம் அவ்வாறு பரிசொதனைகள் மேற்கொள்வதற்காக அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post