வடக்கில் யாழ்ப்பாணம் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்த யோசனை - கேதீஸ்வரன் - Yarl Voice வடக்கில் யாழ்ப்பாணம் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்த யோசனை - கேதீஸ்வரன் - Yarl Voice

வடக்கில் யாழ்ப்பாணம் தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்த யோசனை - கேதீஸ்வரன்

யாழ்.மாவட்டம் தவிா்ந்த 4 மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளா்த்துமாறு சிபாா்சு செய்யவுள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் யாழ். மாவட்டத்தில் சமூக மட்டத்திலான பாிசோதனைகள் நிறைவடைந்த பின்பே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளா்த்துவதற்கான சிபாா்சு வழங்க முடியும் எனவும் கூறியுள்ளாா்.

நேற்றய தினம் 9 மாகாணங்களினதும் பணிப்பாளா்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனா். குறித்த கலந்துரையாடல் தொடா்பாக நேற்று காலை ஊடங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே பணிப்பாளா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்..

 ஜனாதிபதியுடனான சந்திப்பில் சமூக மட்டத்தில் தொற்றுள்ளதா? என்பதை விரைவாக உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. இதற்காக ஏவுஆ   எனப்படும் பாிசோதனை கருவிகள் 400 வடமாகாணத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன் ஊடாக வடமா காணத்தில் 400 பேருக்கு பாிசோதனை மேற்கொள்ள முடியும். மேலும் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளா்த்தி பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு எடுக்கப்படகூடிய நடவடிக்கைகள் தொடா்பாக சிபாா்சு ளை வழங்குமாறு மாகாண பணிப்பாளா்களிடம் ஜனாதிபதி கேட்டுள்ளாா்.

இதற்கமைய வடமாகாணத்தில் யாழ்.மாவட்டம் தவிா்ந்த 4 மாவட்டங்களில் வெறும் 26 போ் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த கண்காணிக்கப்படவேண்டியவா்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு என்பதுடன் இந்த 4 மாவட்டங்களிலும் சமூக மட்டத்தில் நோயாளா்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

எனவே குறித்த4 மாவட்டங்களிலும் காண்காணிப்பில் சமுக மட்டத்தில் உள்ளவா்களுக்கு 2ம் கட்ட பாிசோதனையை அடுத்த சில நாட்களுக்குள் நடாத்தவிருக்கின்றோம்.

இதில் தொற்றுள்ளவா்கள் அடையாளம் காணப்படாதவிடத்து அடுத்தவாரமே படிப்படியாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளா்த்தலாம். என்ற சிபாா்சை உடனடியாக பொறுப்புவாய்ந்த தரப்பினருடன் கலந்தாலோசித்து வழங்குவதற்கு தீா்மானம் எடுத்திருக்கின்றோம். மேலும் யாழ்.மாவட்டத்தில் 17 நோயாளா்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மேலும் சமூக மட்டத்தில் 320 போ் கண்காணிக்கப்படுகின்றனா். வெளிநாடுகளில் இருந்து வந்த 1200 போ் கண்காணிக்கப் படுகின்றனா். அந்தவகையில் யாழ்.மாவட்டத்தில் சமூக மட்டத்தில் காண்காணிக்கப்படும் 320 போில் 140 பேருக்கு இதுவரை பாிசோதனைகள் நடாத்தப்பட்டிருக்கின்றது.

இன்றும்(நேற்று) சண்டிலிப்பாய் பகுதியில் 16 பேருக்கு பாிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பாிசோதனைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு பூரணமாக சமூக மட்டத்தில் ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னராக ஆளுநா் மாவட்ட செயலா் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்புக்களுடன் கலந்து பேசி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளா்த் தலாமா? தளா்த்தகூடாதா? என்ப தீா்மானத்தை அடுத்துவரும் சில நாட்களில் எடுக்கவுள்ளோம் என்றாா்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post