முப்படையினரையும் ஏற்றி வந்த சாரதிகள் நடத்துனர்கள் என 31 பேர் யாழில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனோ தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் குறிப்பாக படையினருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து விடுமுறையில் சென்ற முப்படைகளைச் சேர்ந்தவர்களையும் உடனடியாக படைமுகாம்களுக்கு செல்லுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனடிப்படையில் விடுமுறையில் சென்ற முப்படைகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வருவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சேவையில் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாரதிகள் நடத்துனர்கள் என 31 பேர் ஈடுபட்டிருக்கின்றனர்.
இவ்வாறு முப்படைகளையும் ஏற்றி வந்த சாரிதிகள் நடத்துனர்கள் தமது வீடுகளுக்குச் சென்ற நிலையில் அயலில் உள்ளவர்கள் சுகாதாரப் பிரிவிற்கு தகவல் கொடுத்துனர். அதாவது படையினரை ஏற்றி வந்ததால் அவர்களால் ஆபத்தக்கள் இருக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சாரதிகள் நடத்துனர்கள் என 31 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை இரானுவத்தின் வாகனங்கள் இருக்கத்தக்கதாக போக்குவரத்துச் சபையின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment