யாழில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

யுhழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கொட்டடி கிராமத்தின் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரனின் நிதி உதவியில் அக் கட்சியின் உறுப்பினரும் யாழ் மாநகர சபை பிரதி முதல்வருமான துரைராசா ஈசனின் ஏற்பாட்டில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கொட்டடி கிராசா சனசமூக நிலையத்தில் வைத்து அப் பிரதேசத்தில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட சுமார் 75 குடும்பங்களுக்கு அரிசி மா சீனி பருப்பு சவர்க்காரம் உள்ளிட்ட உலர் உணவுப் பொதிகளும் மாலை நேர உணவும் வழங்கப்பட்டது.

இந்த உதவிப் பொருட்களை கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ்இ பிரதி முதல்வர் து.ஈசன். கட்சி உறுப்பினர் உதயசிறி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post