மாவீரர்தினம் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மணிவண்ணணிடம் விசாரணை - Yarl Voice மாவீரர்தினம் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மணிவண்ணணிடம் விசாரணை - Yarl Voice

மாவீரர்தினம் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மணிவண்ணணிடம் விசாரணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று விhயழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்கரவாதப் விசாரணைப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள மணிவண்ணிண் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டில் வைத்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மணிவண்ணணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.

அதாவது கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நடாத்தியிருந்தார் என்பது தொடர்பில் மணிவண்ணணிடம் இந்த விசாரணைகளை பங்கரவாதப் பரிவினர் மேற்கொண்டிருந்ததாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை இவ் விடயம் தொடர்பாக மணிவண்ணணை தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு பங்கரவாத விசாரணை பிரிவினர் தனது வீட்டிற்கு வந்ததாகவும் மாவீரர் தினத்தில் பங்குபற்றியமை தொடர்பில் தன்னிடம் வாக்குமூலத்தைப் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post