அமெரிக்காவில் கொரோனா தொற்று – உயிரிழந்தோர் எண்ணிக்கை 100,000 ஐ கடந்தது - Yarl Voice அமெரிக்காவில் கொரோனா தொற்று – உயிரிழந்தோர் எண்ணிக்கை 100,000 ஐ கடந்தது - Yarl Voice

அமெரிக்காவில் கொரோனா தொற்று – உயிரிழந்தோர் எண்ணிக்கை 100,000 ஐ கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்கா உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும்,இறப்பிலும் முதலிடத்தில் உள்ளது இந்நிலையில் அங்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நியூயோர்க்கில் நேற்றுமட்டும் 141 புதிய உயிரிழப்புக்களுடன் 29 ஆயிரத்து 451 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு 3 இலட்சத்து 73 ஆயிரத்து 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நியூ ஜெர்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 42 பேர் உட்பட 11 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 413 பேர் உட்பட பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 57 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post