வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி வேண்டும் – பி.சி.சி.ஐ.யிடம் உத்தப்பா கோரிக்கை - Yarl Voice வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி வேண்டும் – பி.சி.சி.ஐ.யிடம் உத்தப்பா கோரிக்கை - Yarl Voice

வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி வேண்டும் – பி.சி.சி.ஐ.யிடம் உத்தப்பா கோரிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கை தவிர வெளிநாட்டு  கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், வெளிநாட்டு ரி20 லீக் தொடர்களிலும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களை பி.சி.சி.ஐ விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரரான ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவது போன்று அவுஸ்ரேலியாவில் பிக் பாஷ் லீக், மேற்கிந்தியத் தீவுகளில் கரீபியன் பிரிமீயர் லீக், தென் ஆபிரிக்காவில் மேன்சி சுப்பர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சுப்பர் லீக், பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் ஆகிய ரி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தப்பா, “இந்திய வீரர்களை,வெளிநாடுகளில் நடைபெற்று வரும் ரி20 லீக் தொடர்களில்  விளையாட அனுமதிக்காவிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் ஒன்றிரண்டு லீக்கில் விளையாட அனுமதி அளித்தால் கூட, சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், கிரிக்கெட் குறித்து மேலும் கற்றுக்கொள்ளவதற்றும், வளர்ச்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும்” என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post