மூடப்பட்டுள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொரோனோ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர் ஊரடங்கு சட்டம் பல இடங்களிலும் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நேரத்தில் மமதுபானசாலைகள் ஆரம்பத்தில் திறக்கப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி பேணப்படாத காரணத்தால் அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலைமையில் தான் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள மதுபானசாலைகளை திறப்பது குறித்தும் இது தொடர்பான அறிவித்தலை விடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment