யாழில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 91 மதுப் போத்தல்கள் மீட்பு - சந்தேகத்தில் மூவர் கைது - Yarl Voice யாழில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 91 மதுப் போத்தல்கள் மீட்பு - சந்தேகத்தில் மூவர் கைது - Yarl Voice

யாழில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 91 மதுப் போத்தல்கள் மீட்பு - சந்தேகத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியை கோப்பாய் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 91 மதுப் போத்தல்களை மீட்டுள்ளதுடன் சட்டத்திற்கு முரணகாக முபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

உரும்பிராய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்கவின் வழிகாட்டலில் போலீஸ் பரிசோதகர் ஜெயசிங்க தலைமையில் குறித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது அப் பகுதியில் பதுக்கி சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 91 சாராயப் போத்தல்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post