ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு! - Yarl Voice ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு! - Yarl Voice

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை அண்மிக்கின்றது.
இறுதி நிலவரப்படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 396,575ஆக உள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில் 8,952பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 181பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மூன்றாவது நாடான ரஷ்யாவில், வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 4,555பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 224,551பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 167,469பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post