மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட தென்னாபிரிக்கா செல்லும் இந்தியா அணி! - Yarl Voice மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட தென்னாபிரிக்கா செல்லும் இந்தியா அணி! - Yarl Voice

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட தென்னாபிரிக்கா செல்லும் இந்தியா அணி!

இந்தியக் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.
[ads id="ads1"]
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, ஏற்கனவே இரத்து செய்யப்பட்ட தொடருக்கு பதிலீடாக இத்தொடர் நடத்தப்படுகின்றது.

இந்ததொடர் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி அட்டவணைக்குள் இல்லை. எனினும் இருநாட்டு கிரிக்கெட் சபைகளின் சம்மதத்துடன் இந்த போட்டித் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை எதிர்வரும் ஒகஸ்ட் மாத இறுதியில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், அடுத்த கோடைக்காலத்தில் நடத்தப்படும் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் இயக்குனர் கிரேம் ஸ்மித் இதுகுறித்து கூறுகையில் ”நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று போட்டிகளை நடத்த சம்மதம் பெற்றுள்ளோம். ஒகஸ்ட் மாதம் இறுதியில் என்ன நடக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் ஏதும் கூற இயலாது. ஆனால் சமூக இடைவெளி, இரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த முடியும் என்று நம்புகிறோம்” என கூறினார்.

கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. முதல் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. இறுதி இரண்டு போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தால் இரத்து செய்யப்பட்டன.

2019-2020 சீசனில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை, சுமார் 36 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post