அடுத்த ஆண்டு நிலைமையை பொறுத்துதான் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்: தாமஸ் பேச் - Yarl Voice அடுத்த ஆண்டு நிலைமையை பொறுத்துதான் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்: தாமஸ் பேச் - Yarl Voice

அடுத்த ஆண்டு நிலைமையை பொறுத்துதான் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்: தாமஸ் பேச்

அடுத்த ஆண்டு நிலமையை பொறுத்துதான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.
[ads id="ads1"]
எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கோடைக் கால ஒலிம்பிக் போட்டி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டும் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனிடையே இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அல்லது 5 ஆயிரம் பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது. விளையாட்டு வீரர்களை நிச்சயமற்ற நிலையில் வைத்திருக்க முடியாது.

மாறுபட்ட சூழ்நிலைகள் உள்ளன. அதை அடையாளம் காண்பது மிகவும் எளிது அல்ல. உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் திகததிக்குள் எப்படி இயங்கப்போகிறது என்பது குறித்து தெளிவான பார்வை கிடைத்த பின்னர்தான், பொருத்தமான முடிவு எடுக்கப்படும்” என கூறினார்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த வருடம் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post