25 ஆம் திகதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்! - Yarl Voice 25 ஆம் திகதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்! - Yarl Voice

25 ஆம் திகதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்!

இந்தியாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
[ads id="ads1"]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் நான்காம் கட்டமாகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்குள் வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் மற்றும் விமான சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்குகின்றன.

மேலும், நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில் சேவைகளும் தொடங்கப்படவுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் மே 25 ஆம் திகதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நாடு முழுவதும் மே 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும். முதற்கட்டமாக குறைவான எண்ணிக்கையில் விமான சேவைக்கு அனுமதிக்கப்படும்.

இதனால் அனைத்து விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post