தமிழகத்திற்கு 295 கோடி ரூபாய் ஒதுக்கீடு.. - Yarl Voice தமிழகத்திற்கு 295 கோடி ரூபாய் ஒதுக்கீடு.. - Yarl Voice

தமிழகத்திற்கு 295 கோடி ரூபாய் ஒதுக்கீடு..

தமிழகத்திற்கு உள்ளூராட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் இருந்து 295 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
[ads id="ads1"]
கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது. இதற்கிடையே பொது முடக்கத்தால் மாநில வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் இருந்து தமிழகத்திற்கு 295 கோடி ரூபாயை மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15ஆவது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post