நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரும் அங்கஐன் - Yarl Voice நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரும் அங்கஐன் - Yarl Voice

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரும் அங்கஐன்

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தில் தலையிட்டு தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார் என உண்மைக்குப் புறம்பான அடிப்படை ஆதாரங்களற்ற தகவலைத் ஊடகங்களுக்கு தெரிவித்து தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.
[ads id="ads1"]
இத்தேர்த்தல் காலத்தில் திட்டமிட்ட விசமப் பிரச்சாரமாக தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் ஒருவர் செயற்பட்டமை திட்டமிட்டே நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் வலிந்து சந்தித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்இ

பேரிடர் முகாமைத்துவ நிலையத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர் அங்கஜன் இராமநாதனிடம் கொடுத்தார் என அரசியல்வாதிகளும் வேட்பாளர்களும் தேர்தல் விதிகளை மீறி தமது அரசியல் நோக்கத்துக்காகச் செயற்படுகிறார் எனவும் தெரிவித்திருந்தார்.

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட பொருட்கள் எவற்றையும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடமிருந்து அங்கஜன் இராமநாதன் பெறவில்லை. இதை மறுதினமே யாழ்ப்பாண மாவட்ட செயலாளரே மறுத்திருந்தார். இந்த அப்பட்டமான பொய்யால் தேர்தல் நெருங்கும் இக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நின்று பணியாற்றும் அவருடைய நற்பெயருக்கு வேணுமென்றே களங்கம் ஏற்படுத்தபட்டுள்ளது.
[ads id="ads2"]
இரண்டு கிழமைகளுக்குள் பதிலளிக்காவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post