குடத்தனை சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடாத்த வேண்டும் - சபா குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice குடத்தனை சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடாத்த வேண்டும் - சபா குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice

குடத்தனை சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடாத்த வேண்டும் - சபா குகதாஸ் வலியுறுத்து


வடமராட்சி கிழக்கில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரம் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் மேற்படி கோரிக்கையை ஐனாதிபதியிடம் விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் தெரிவித்தள்ளதாவது..

நாட்டின் சட்ட ஒழுங்குகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மக்களின் நண்பர்களாக நடந்து கொள்ளாமல் வன்முறையாளர்களாக செயற்பட்டு பெண்கள் மீது அடிதடிப் பிரையோகங்களை மேற்கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத போதும் எதேச்ச அதிகாரிகள் போன்று சட்டத்தை தங்களது கையில் முழுமையாக எடுத்துக் கொண்டமை வன்மையாக கண்டிக்கப்படுவதுடன் இச் சம்பவம் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணை உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறாது என்பதை நீதித் துறை உறுதி செய்ய வேண்டும்.

கொவிட் 19 பாதிப்பு ஒரு புறம் இருக்க இவ்வாறான மேலதிக பாதிப்புக்கள் மக்களின் அமைதி வாழ்வுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை மக்களுக்கு பெற்றுக் கொடு்க்க வேண்டும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post