தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அச்சுறுத்தி பழிவாங்குகிறது அரசு - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அச்சுறுத்தி பழிவாங்குகிறது அரசு - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அச்சுறுத்தி பழிவாங்குகிறது அரசு - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகயை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கின்ற நிலையில் அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இடைஞ்சலாக இருப்பதாலே முன்னணியின் உறுப்பினர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

கடந்த காலங்களில் நடைபெற்ற மாவீரர் தினம் சம்மந்தமாக எமது கட்சியின் தேசிய அமைப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். இவ்வாhற விசாரணைகள் என்பது எமது கட்சியின் செயற்பாடுகளை முடக்குதவற்கும் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்களை அச்சுறுது;துவதற்காகவும் முன்னெடுக்கப்படுகின்ற பழிவாங்கல் செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றொம்.

எம்மைப் பொறுத்தவரையில் இன்றைய மிக நெருக்கடியான கால கட்டத்தில் கட்சி என்ற கோணத்தில் எமது கட்சி தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னின்று செயற்படுகிறது. அந்தப் பணிகளில் கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணணன் முன்னின்று செயற்படுகிற நிலையில் தான் அவர் மீது விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

அதே போல மகளிர் அணி அமைப்பாளர் வாசுகி சுதாகரன் மீது இவ்வாறான இரானுவமும் பொலிஸாரும் இணைந்து அச்சுறுத்தலை மேற்கொண்டடிருக்கின்றனர். குறிப்பாக படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை பாடசாலைகளில் அமைக்க படையினர் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு சென்ற திருமதி வாசுகியை அச்சுறுத்தி கைது செய்யவும் முயற்சி எடுத்திருக்கின்றனர்.

குறிப்பாக மக்கள் மட்டத்தில் எமது கட்சியினர் தீவிவரமாக வேலை செய்யும் கால கட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தி; உறுப்பினர்களைச் சுற்றியுள்ள கட்சியின் செயற்பாடாளர்களை பயமுறுத்தி ஒட்டுமொத்தமாக எம்மை  முடக்கும் வகையிலையே அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இதே போன்று மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் உரிய அனுமதிகளை அதாவது பாஸ் அனுமதி பெற்று எமது கட்சியினர் மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற போது கூட அந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தி அந்தப் பணிகளைச் செய்ய விடாமலும் பொலிஸார் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் வடமராட்சி கிழக்கு மறறும் தென்மராட்சி போன்ற பல இடங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.

வடகிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் எதனையும் இந்த அரசாங்கம் கொடுக்காமல் இருக்கிற நிலையில் எமது கட்சியானது தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றது. ஆயினும் தமிழருக்காக தமிழர்கள் செய்கின்ற உதவி வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்தும் குழப்பி வருகின்றது.

ஏனெனில் தமிழ் மக்களை இக்கட்டான நிலைக்கு தள்ள விரும்பியிருக்கின்ற அரசின் திட்டத்திற்கு முன்னணியின் செயற்பாடுகள் அந்தத் திட்டத்தை குழப்பி மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதல் கொடுக்கின்ற  வகையில் செயற்படுவதால் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தி குழப்புகின்ற வகையில் முன்னெடுக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post