கொரோனோ அபாய காலத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் என்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கேள்விகளை எழுப்பியிருப்பதுடன் சந்தேககங்களையும் உண்டுபண்ணியிருப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தகளிலேயே படையினருக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதானாது இங்குள்ள மக்களுக்கும் கொரோனாவைப் பரப்புதான ஒரு எண்ணமா அல்லது சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளமாக அமையப்போகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனோ நிலைமைகளில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவதுஃ.
கொரோனோ வைரசின் தாக்கம் உலக ரீதியாக எம்மால் உணரப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தக் கால கட்டத்தை வேறு காரணங்களுக்காகவும் பதவியில் உள்ளோர்கள் பாவிக்கப் பார்கின்றார்களா என்ற பயம் எம்மைப் பீடித்து இருக்கின்றது.
அதாவது கொரோனோ வைரஸின் தாக்கத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் இரானுவத்தினரை எதற்காக தமிழ் மக்கள் வாழும் பிரதேசதங்களில் தமிழ் மக்கள் மத்தியிலே அடையாளம் காட்டி அங்கு படையினர்களைக் கொண்டு வந்து வைக்கின்றார்கள் என்ற கேள்வி எழுக்கின்றதுடன் அது பலத்த சந்தேகங்களையும் உண்டாக்குகின்றது.
குறிப்பாக இங்கிருப்பவர்களுக்கு கொரோனோ குறைந்தவாறு இருக்கும்; நிலையிலே அங்கு தொற்று சந்தேகத்திலுள்ளவர்களையும் இங்கு கொண்டு வந்து வைத்து இங்குள்ளவர்களுக்கும் கொரோனாவைக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு எண்ணமா?
அல்லது இதை அடிப்படையாக வைத்து வரப் போகும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளமாக அமையப் போகின்றதா என்று பலவிதமான கேள்விகள் எங்கள் மனதில் எழுந்து கொண்டிருக்கின்றன.
எங்கள் வைத்தியர்கள் தாதியர்கள் என சுகாதார துறையினர் உன்னதமான சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் அதற்கு அப்பால் அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதைப் பார்க்கும் போது இந்தக் கொரோனோவை தங்கள் தனிப்பட்ட அரசியலலுக்காக பாவிக்க சிலர் முற்படுகின்றனரா என்ற சந்தேகம் எம்மை வாட்டிக் கொண்டிருக்கின்றது.
இந்த சந்தேகத்தை நீக்குவது அரசாங்கத் தரப்பின் கடமையாகும். தமிழ் மக்களிடையே அதாவது குறைந்தபட்சத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடையே; அங்கிருந்து கொரோனோ சந்தேகத்தில் கொண்டு வந்து தனித்து வைக்க பார்ப்பது வரும்காலத்தில் தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க
மத்தளை விமான நிலையத்தில் போதிய இடவசதி உள்ளிட்ட பல வசதிகள் எல்லாம் இருக்கிறது. ஆகவே அங்கு கொண்டு சென்று இரானுவத்தினரை பராமரிக்காமல் இங்கு ஏன் மக்களிடையே மக்களினை மையமாக வைத்து அவர்களைச் சுற்றி படையினரை வைக்க எத்தனிக்கிறார்கள் என்று பார்க்கும் போது பல்வேறு அரசியல் காரணங்கள் இதற்கு அடிப்படைக் காரணங்களாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
ஆகவே இந்தச் சந்தேகங்களை எல்லாம் தீர்க்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அவற்றைத் தீர்ப்பார்க்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Post a Comment