ரெலோவின் முன்னாள் தலைவர் சிறிசபாரத்தினம் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது - Yarl Voice ரெலோவின் முன்னாள் தலைவர் சிறிசபாரத்தினம் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது - Yarl Voice

ரெலோவின் முன்னாள் தலைவர் சிறிசபாரத்தினம் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவேந்தல் அக்கட்சியின் ஏற்பாட்டில் யாழில் இன்று நடைபெற்றது.

ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த சிறிபாரத்தினத்தின் நினைவு நாள் நிகழ்வுகள் அவர் படுகொலை செய்யப்பட்ட கோண்டாவில் அன்னைவேலாங்கனையில் இன்று நடாத்தப்பட்டது.

அக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் நிநைவேந்தல் நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சுரேன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், சபா குகதாஸ், நல்லுார் பிரதேச சபையின் உறுப்பினரான ஐயகரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post