ஸ்பெயினில் உள்ள இருபெரும் நகரங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானம்! - Yarl Voice ஸ்பெயினில் உள்ள இருபெரும் நகரங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானம்! - Yarl Voice

ஸ்பெயினில் உள்ள இருபெரும் நகரங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானம்!

ஸ்பெயினில் உள்ள இருபெரும் நகரங்களான தலைநகர் மட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
[ads id="ads1"]
ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த திங்கட்கிழமை மெட்ரிட் மற்றும் பார்சிலோனாவை தவிர மற்ற நகரங்களில் பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு தளர்த்தியது.

இந்தநிலையில், எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் தலைநகரம் மற்றும் பார்சிலோனாவில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.

இதற்கமைய, மட்ரிட் மற்றும் பார்சிலோனாவில் உள்ள மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் இப்போது நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்ந்து திங்கட்கிழமை முதல் பாதி திறனில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் 10பேர் வரை கூட்டங்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இதுதவிர, தேவாலயங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

ஸ்பெயினின் பிற பகுதிகளில், திரையரங்குகள் மற்றும் கலைக்கூடங்கள், திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இல்லாததால் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் ஏறக்குறைய 47 மில்லியன் மக்கள், கடந்த மார்ச் 14ஆம் திகதி முதல் உலகின் மிகக் கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று குறைந்துவரும் நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும், சமூக விலகள் விதிகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post