ஐனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரிசாத் பதியூதீன் - Yarl Voice ஐனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரிசாத் பதியூதீன் - Yarl Voice

ஐனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரிசாத் பதியூதீன்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் கொவிட் 19 வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டிய முறைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொவிட் 19 வைரஸால் தொடர்ந்தும் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதால் முஸ்லீம் சமூகம் பாரிய கவலை கொண்டுள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கொரோனா வைரஸால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை எரியூட்டுகின்றமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆலோசனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முஸ்லீம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post