ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தே.அ.அ இறுதி இலக்க நடைமுறை கட்டாயம் - பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தே.அ.அ இறுதி இலக்க நடைமுறை கட்டாயம் - பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தே.அ.அ இறுதி இலக்க நடைமுறை கட்டாயம் - பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தே.அ.அ இறுதி இலக்க நடைமுறை கட்டாயம் - பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
 நாளை (11) முதல் பணிகளை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார் . அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது
[ads id="ads1"]
 நாளை முதல் பணிக்கு செல்பவர்கள் மின்னணு ஆவணம் அல்லது பணியிட அடையாள அட்டையை வைத்திருத்தல் கட்டாயம்.

சொந்த வாகனங்களில் பணிக்கு செல்லும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவும், தனியார் ஊழியர்கள் காலை 8.30 மணியில் இருந்து 10 மணிக்குள்ளும் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும்.

பணியிடத்தில் இருந்து அரச ஊழியர்கள் 3 மணி முதல் 4 மணிக்குள்ளும், தனியார் ஊழியர்கள் 4 மணி முதல் 5 மணிக்குள்ளும் வீடு திரும்ப வேண்டும்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து முச்சக்கரவண்டி மற்றும் வாடகைக்கு அமர்த்திய வாகனங்களில் பயணிக்க அனுமதி.

கட்டுமான தளங்கள், சலூன்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தமது பணியை தொடங்க முடியும்.
[ads id="ads2"]
ஹோட்டல்களை இயக்க முடியும், ஆனால் உணவங்களுக்கான அனுமதி கிடையாது. சமைத்த உணவு, தேநீர், பழச்சாறு விற்பனை கடைகள், ஜிம்கள் மற்றும் இரவு கிளப்களுக்கு அனுமதி கிடையாது.

தே.அ.அ. இறுதி இலக்க முறையில் நடந்து கடைகளுக்கு செல்ல அனுமதி.

0/Post a Comment/Comments

Previous Post Next Post