கொரோனோ சிகிச்சைக்கு அமெரிக்காவில் புதிய மருந்து கண்டுபிடிப்பு - Yarl Voice கொரோனோ சிகிச்சைக்கு அமெரிக்காவில் புதிய மருந்து கண்டுபிடிப்பு - Yarl Voice

கொரோனோ சிகிச்சைக்கு அமெரிக்காவில் புதிய மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை தொற்றியுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் அமெரிக்கா இங்கிலாந்து ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று எபோலோவுக்காக உருவாக்கப்பட்ட ஆன்டி வைரல் மருந்தை சில மாற்றங்களுடன் கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை செய்தது.

மூன்று கட்ட சோதனை முடிவில் ரெம்டெசிவர் என்ற அம்மருந்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. இது அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உதவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் அவசர சிகிச்சைகளுக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post