நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரை இலங்கையில் நடத்தலாம் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான மெத்தியூ ஹெய்டன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
[ads id="ads1"]
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது அத்தியாயம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடையாததால், இத்தொடரை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை யோசித்து வருகின்றது.
இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரை இலங்கையில் நடத்தலாம் என மெத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘இந்தாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். ஐ.பி.எல் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடந்தாலும் சுவாரஸ்யம் குறையாது.
இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் நிச்சயமாக ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். ஆனால் இது போன்ற சூழலில் வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாது. மேலும் ரசிகர்கள் இல்லாத மைதானங்களிலும் போட்டிகளை நடத்தவேண்டும்.
அதேபோல அதிகம் அபாயம் இல்லாத இரண்டு அல்லது நான்கு மைதானங்கள் மட்டும் கொண்ட கொழும்பு போன்ற நகரில் முன் எச்சரிக்கைகளுடன் பாதுகாப்பாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை நடத்துவது நல்லது. அதற்கு ஏற்ப இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் ஐ.பி.எல் தொடரை நடத்த முன் வந்ததுள்ளது’ என கூறினார்.
Post a Comment