இங்கிலீஷ் ப்ரிமியர் லீக்: மூன்று கழகத்திலுள்ள ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! - Yarl Voice இங்கிலீஷ் ப்ரிமியர் லீக்: மூன்று கழகத்திலுள்ள ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! - Yarl Voice

இங்கிலீஷ் ப்ரிமியர் லீக்: மூன்று கழகத்திலுள்ள ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இங்கிலாந்தில் நடைபெறும் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையிலான இங்கிலீஷ் ப்ரிமியர் லீக் கால்பந்து தொடரில், ஆறுபேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
[ads id="ads1"]
ப்ரீமியர் லீக்குடன் தொடர்புடைய வீரர்கள் மற்றும் கழக ஊழியர்கள் என மொத்த 748பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது.

இதில் மூன்று வெவ்வேறு கழகங்களில் உள்ள ஆறுபேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

வாட்ஃபோர்ட் (watford) கழகத்திலிருந்து ஒரு வீரர் மற்றும் இரண்டு பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதில் உதவி மேலாளர் இயன் வோனும் ஒருவர் ஆவார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 10ஆம் திகதி இங்கிலீஷ் பீரிமியர் லீக் தொடர் இடை நிறுத்தப்பட்டது. இத்தொடரில் இன்னமும் 81 லீக் போட்டிகள் மீதமுள்ளன.

தற்போது இங்கிலாந்தில் கொவிட்-19 முடக்கநிலையில் பெரும்பகுதி தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் மாதம் இரண்டாவது வாரத்தில் இத்தொடர் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post