மே மாத கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் - Yarl Voice மே மாத கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் - Yarl Voice

மே மாத கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

மே மாத கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்
மே மாத கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் 

நாளை முதல், மே மாத ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பனவு வீடுகளுக்கே...

கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவுகளுக்கு எனது பணிப்புரையின் பேரில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பனவு, இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ads id="ads1"]
2020 ஏப்ரல் மாதம் மேற்படி கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற நிலையான நன்மை பெறுனர்கள், முன்னுரிமை மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுனர்கள் ஆகியோர் உள்ளடங்கிய நன்மை பெறுனர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ், கிராம சேவையாளர்கள் நன்மை பெறுனர்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவுகளை வழங்குவர்.

கொடுப்பனவு வழங்குதல் -  2020, மே 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, மே 15ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளது.

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது - பின்வருமாறு கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது:

முதியோர்களுக்கான கொடுப்பனவு மற்றும் நூறு வயது பூர்த்தியான முதியோர் கொடுப்பனவு – தேசிய முதியோர் செயலகத்தின் மூலம்;

மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு – மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய செயலகம் மூலம்;

விவசாயிகளுக்கான மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் – விவசாய காப்புறுதி சபை மூலம்.
[ads id="ads2"]
முதியோர்களுக்கான கொடுப்பனவு, நூறு வயது பூர்த்தியான முதியோர்களுக்கான கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு என்பன வழங்குவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் - பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான ஓய்வூதியம், மீனவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஏனைய உரித்துடைய நன்மை பெறுனர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் -  பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post