ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - மருத்துவ சங்கம் கோரிக்கை - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - மருத்துவ சங்கம் கோரிக்கை - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - மருத்துவ சங்கம் கோரிக்கை

சமூகத் தொற்று பரவாத வகையில் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டிபன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
[ads id="ads1"]
வடக்கில் உண்மையில் சமூகத் தொற்று பரவாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்திற்குள் தொற்று இல்லை எனக் கூற முடியாது. ஆயினும் தற்பொது வரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனோ கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றதாக கூறினாலும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போது தொற்று ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த இன்னும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்.

யுhழில் 840 பேரில் 20 பேருக்கு தான் திரும்ப திரும்ப சோதித்துள்ளோம். மற்றவர்களுக்கு ஒரு தடவை செய்தோம். ஆரம்ப அறிகுறி இருந்தால் அது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆகையினால் ஊரடங்கு நீக்கப்பட்டு அவர்கள் வெளியே வருகின்றதால் மற்றவர்களுக்கு கொடுக்கும் போது வெளிக்காட்டப்படும். எனவே;. திருப்ப திரும்ப செய்வது நல்லது. என்று கூறுகிறோம். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக இலங்கையில உள்ள இன்றைய நிலைமைகளை எடுத்துக் கொண்டால்; வைரசின் தன்மை குறைவாக உள்ளது. இலங்கையில் பரவின வேகம் குறைவாக இருந்தாலும் ஆரம்பத்தில் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று ஒரு சில இடங்களிலில் பரவல் அதிகமாக இருந்தாலும் தாக்கம் குறைவாகவே உள்ளது.

ஆனாலும் இந்த வைரஸ் ஏனைய இடங்களில் பரவாது என்றில்லை. குறிப்பாக கடற்படையினர் மத்தியில் இந்த வைரஸ் பரவி வருவதற்கு சமூக இடைவெளி பேணப்படாததும் தனிநபர் சுகாதார் பேண்ப்படாததும் தான் காரணம். மேலும் தொற்று கட்டப்பாட்டில் இருந்தாலும் பரவாமல் இருக்கும் என்றில்லை. சமூக இடைவெளி சுகாதாரம் பேண வேண்டுமென்பது அவசியம்.

தொற்று கட்டப்பாட்டிற்குள் இருப்பதற்கு 2 காரணம் சொல்கின்றனர் சந்தேகத்தில் வருபவர்கள் குறைவாக உள்ளனர். தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தான் தொற்று வந்துள்ளது. வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு தொற்று இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு 2 ஆம் தடவை பரிசொதனை செய்யவதில்லை. அது ஆபத்து. ஆகவே கட்டாயம் அடுத்த பரிசோதனை செய்ய வேண்டுமென மிண்டும் சொல்லுகிறோம்.

தற்போது ஊரடங்கு அடிக்கடி போடப்படுகிறது. அதே நேரத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு பரவலாக தளர்த்தப்பட்டால் 80 வீதமான அறிகுறி இலருப்பவர்கள் மக்களுடன் கலந்தால் அது பெரிய ஆபத்து. ஆகையினால் இன்றைய நிலைமைகளை வைத்து நாளைய நிலைமை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது.
[ads id="ads2"]
இவ்வாறான நிலைமையில் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் தாக்கம் அதிகரித்திருந்தாலும் இப்ப தாக்கம் குறைவு தான். ஆனால் தொடர்ந்தும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. இன்றைய நிலைமை நாளைக்கு இருக்குமா என்று தெரியவில்லை. கட்டப்படுத்தியதாக சொன்ன பின்னரே நோய் அதிகரித்தது. தொடர்ந்து செய்யும் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே நிலைமைகளைக் கூற முடியும்.

துற்போது குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட சிலரிடத்தே தான் தொற்று அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் தொற்று வெளியில் வந்தால் அது சமூகத் தொற்று. நோயளிகள் கூடி சமூகப் பரவல் வந்தால் அதனைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் இலங்கைக்கு சமூகத் தொற்று வரவில்லை. வராமல் தான் கட்டப்படுத்தி வைக்கப்படுகிறது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post