சமூக இடைவெளியை பேணாவிட்டால் ஆபத்து - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice சமூக இடைவெளியை பேணாவிட்டால் ஆபத்து - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice

சமூக இடைவெளியை பேணாவிட்டால் ஆபத்து - மருத்துவ சங்கம் எச்சரிக்கை

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக ஊரடங்கு தளரத்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கட்டாயம் வேண வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் மருத்துவர் காண்டிபன் தெரிவித்துள்ளார்.
[ads id="ads1"]
ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேண வேண்டும். அதிலிருந்து பின்வாங்க கூடாது. அரசு ஊரடங்கு போடும் போதும் தளர்த்தும் போது சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களை பேண வேண்டும்.

அத்தகைய சுகாதார நடைமுறை குறித்தான அறிவுறுது;தல்களைப் பின்பற்ற வேண்டும். சமூக இiவெளி வேண வேண்டும் முகக் கவசம் அணிய வேண்டும் .சவர்கக்காரம் போட்ட கைகழவுதல் வேண்டும் போன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மருத்துவத் துறையினர் என்பதால் நாங்கள் கொரோனோவை ஒழிப்பது குறித்தும் மக்களைப் அதிலிருந்த பாதுகாப்பது குறித்துமே சிந்திப்பொம். அதற்கமையவே நடவடிக்கைகளை எடக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தனியே கொரோனேவை மட்டும் சிந்தித்து முடிவெடுக்க முடியாது என்றும் நாட்டின் அனைத்து நிலைமைகளை வைத்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டுமென்று அரசு கூறி வருகிறது.
[ads id="ads2"]
அதனடிப்படையிலையே ஊரடங்கையும் தளர்த்துவதாக அரசு கூறுகிறது. ஊரடங்கு தளர்த்பதப்பட்டால்; பழைய நிலைக்கு திரும்பலாம் சுகாதாரம் பேணத் தேவையில்லை என்ற நிலை மக்களிடத்தே உள்ளது.

எங்கள் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்; இலங்கையில் கொரோனோ முற்றாக இல்லை என்று அறிவிக்கும் வரைக்கும் அல்லது தடுப்பு மருந்த கண்டுபிடிக்கும் வரைக்கும் அல்லது இலங்கையில் இல்லை என்று அறிவிக்கும் வரைக்கும் இந்த அறிவுறுது;தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post