மாகாண சபையை குறை கூற மட்டும் வாய் திறக்கும் தவராசா ஏனைய நேரங்களில் மௌன விரதம் இருக்கின்றாரா? கூட்டமைப்பு கேள்வி - Yarl Voice மாகாண சபையை குறை கூற மட்டும் வாய் திறக்கும் தவராசா ஏனைய நேரங்களில் மௌன விரதம் இருக்கின்றாரா? கூட்டமைப்பு கேள்வி - Yarl Voice

மாகாண சபையை குறை கூற மட்டும் வாய் திறக்கும் தவராசா ஏனைய நேரங்களில் மௌன விரதம் இருக்கின்றாரா? கூட்டமைப்பு கேள்வி


வடக்கு மாகாண சபையை ஆட்சி செய்தவரகளை குறை கூறுவதற்கு மட்டும் வாய் திறக்கும் ஈ.பீ.டீ.பி தவராசா  இந்த நாட்டில் அநீதிகள்  இடம்பெறும் படுத்து உறங்குகின்றாரா எனக் கேள்வி எழுப்ப விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைத் தலைவரும் 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழச்சியான நிலையில் காணப் படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்திருந்தார்.

உண்மையில் வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழச்சியான நிலையில் காணப் படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடும் ஓர் காரணமாக இருக்கலாம் சாதாரணப் பெறுபேறு கடந்த வாரம் வெளிவருவதற்கு முன்னர் அதாவது கோட்டாபாய ராயபக்சா ஜனாதிபதியானது முதல் அவரது தலைவர் அமைச்சராகியதும் மௌன விரதம் இருந்த நிலையில் தற்போதாவது மௌனம் கலைத்திருக்கின்றார்.

அதாவது இதில்கூட அரசியல் ஙாபம் கருதி வாய்திறந்தாரேயன்றி மக்கள் நலனிற்காகவல்ல. ஏனெனில் இந்த 4 மாதகாலமும் எத்தனை அசம்பாவிதங்கள் இ எத்தனை சட்ட விரோதங்கள் எத்தனை மோசடி  எத்தனை நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றன. அப்போதெல்லாம் வாய் திறவாத தவராசா தற்போது மட்டும் வாய் திறப்பதன் அர்த்தம் மக்கள் அறிவர் அதாவது கூட்டபைப்பினை தவறு உரைப்பது மட்டுமே அவரது இலக்காகவுள்ளது.

அல்லது பல நிர்வாகங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டபோது  பாடசாலைகள் இராணுவத்திற்காக எடுக்கப்பட்டபோது  மாகாண சபைநின் அதிகா்த்தில் மத்தி கை வைத்தபோது  நாட்டில் சட்டம் ஒருங்கு உண்டா என்ற ஐயம் உள்ளபோதெல்லாம் வாய்திறவாத நிலையில் இன்று வாய் திறந்துள்ளார்.

இன்று கல்வி பின்னடைவிற்கு இறுதியாக இருந்த மாகாண சபை என்பதற்கு அப்பால் மத்திக்கு 25 ஆண்டு முட்டுக்கொடுத்தவர்கள் பதில் கூறவேண்டும். இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் ஆசிரியர்கள் பகிரந்தளிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியவர்கள் தமக்குச் சார்பானவர்களை பாதுகாக்க முயன்றனர்.

கல்வியின் பின்னடைவிற்கு  யுத்தத்தின் விளைவு காரணம் எனக்  கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்து யுத்தத்திற்கு தாம் அளித்த ஒத்துழைப்பிற்கு நியாயம் கற்பிக்கவே முயற்சிக்கப்படுகின்றது .போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகியும் கல்வியில் முன்னேற்றம் காண முடியாத நிலைமை காணப்படுகின்றது என்றால் கோர யுத்தத்தின் வடு அவ்வாறு ஆழ ஊடுருவியுள்ளது. என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post