கொரோனா காலத்தில் மாநகர எல்லைக்குள் சட்டவிரோத கட்டிடங்கள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்து - Yarl Voice கொரோனா காலத்தில் மாநகர எல்லைக்குள் சட்டவிரோத கட்டிடங்கள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்து - Yarl Voice

கொரோனா காலத்தில் மாநகர எல்லைக்குள் சட்டவிரோத கட்டிடங்கள் அமைப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை பயன்படுத்தி யாழ் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் அதிக சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்படும் நிலையில் உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பில் வீதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் அமைக்கப்படுவதோடு வீதியோரங்களில் மழைநீர் வடிந்தோடும் இடங்களை ஆக்கிரமித்து சீமேந்து இட்டு வீதிகளில் வாகனத் நரிப்பிடங்கள் வரையில் அமைக்கப்படுவதோடு நிர்வாகம் இயங்கிய நாட்களில் சட்டப்படியாக தடுக்கப்பட்ட கட்டிடங்கள் ஊரடங்கு வேளையிலும் மிக வேகமாக அமைக்கப்படுகின்றது.

கொரோனா அச்சம் காரணமாக அலுவலகங்களில் போதிய பணியாளர்களின் வரவு இன்றி அலுவலகங்கள் முழுமையாக இயங்காத நிலமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்படும் நிலையில் எந்தவிதமான நடவடிக்கையும் இன்றி பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக பணவசதி படைத்தோர் வீதிகளை ஆக்கிரமித்து கடைகளையும் வருமான ஈட்டல்கள் மற்றும் ஆடம்பர கட்டுமானப் பணிகளை மேற்பொள ளும் சலயம் வாய்மூடி மௌனிகளாக இருக்கும் அதிகாரிகள் சீரான காலத்தில் ஏழைகள் வாழ்வியலிற்காக வீடுகளை கட்டும் சமயம் மட்டும் அளவை நாடாக்களுடன் வருவார்கள் அப்போது அவர்களிற்கு வழங்க எம்மிடம் பணம் இல்லாத காரணத்தால் அவற்றினை உடைக்க வேண்டும். எனக் கவலை தெரிவிக்கின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post