வங்கி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! - Yarl Voice வங்கி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை! - Yarl Voice

வங்கி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் பொருளதாரத்தை மீள கட்டியெழுப்பும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கு அத்தியாவசிய தேவையாக வங்கிகளின் கடனுதவி உள்ளது.

பொதுத்துறை வங்கி அதிகாரிகள்  அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் உதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களுக்கு உதவ வேண்டும்.

வங்கிகள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி உழவர் கடன் அட்டைகள் வழங்க வேண்டும். சிறு,  குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா 20 இ லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்க வேண்டும். வேளாண்மைத் துறைக்கு 1.48 இலட்சம் கோடி வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post