கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல் - Yarl Voice கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல் - Yarl Voice

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல்

COCID -19 வைரஸ்வரவலால் ஏற்பட்டிருக்கும் கொரோணா தொற்றுநோய் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொடர்உள்ளிருப்பினால் அன்றாடம் உழைத்துவாழும் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இவர்களுக்கான உலர்உணவுப்பொருட்களை வழங்குவதில் இருபாலைதெற்கு கிராம அபிவிருத்தி சங்கம் பொது அமைப்புக்களுடன் இணைந்து 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை உதவித்திட்டங்களை வழங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது பிரதேசத்தில் வதியும் கர்ப்பிணித் தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் (ருமு) கல்வியன்காடு நல்லூர் நண்பர்கள் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் இருபாலைதெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் கட்டப்பிராய் ஆரம்பசுகாதார நிலைய குடும்பநல உத்தியோகத்தர் ஊடாக இப்பொருட்கள் கட்டப்பிராய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடும்பநல உத்தியோகத்தர் பணியாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்.நடேசபிள்ளை கஜேந்திரகுமார் இருபாலைதெற்கு கிராம அபிவிருத்திசங்க தலைவர் பாக்கியராசா பிரதீபன் இருபாலைதெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி.திருமதி.சறோஜா தங்கராசா மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post